”என் ஆட்சியில் துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் இல்லை” - ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்

”என் ஆட்சியில் துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் இல்லை” - ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • News18
  • Last Updated: October 9, 2018, 7:39 PM IST
  • Share this:
கடந்த 6-ம்தேதி கல்லூரி நிகழ்வில் பேசிய பன்வாரி லால் புரோகித் துணை வேந்தர் நியமன விவகாரத்தில் கோடிக்கணக்கான பணம் புரளுவதாக ஆளுநர் பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது

ஊடகங்கள்,  ஆளுநரின் பேச்சை தவறாக வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆளுநர் மாளிகை வெளியிட்ட  செய்திக் குறிப்பில்,  துணை வேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கான பணம் புரளுவதாக கல்வியாளர் தன்னுடான சந்திப்பில் கூறியதாகவும் ஆனால் அதை ஆளுநர் நம்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் பேசியதையே ஆளுநர் குறிப்பிட்டதாகவும், எந்த நபர் மீது ஊழல் குற்றச்சாட்டை ஆளுநர் தெரிவிக்கவில்லை எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் ஆளுநர் நியமித்த 9 துணை வேந்தர்களும் தகுதி அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  துணை வேந்தர் நியமன விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


2018-க்கு முன் லஞ்ச ஊழல் அதிகாரிகள் துணை வேந்தர் வீட்டில் சோதனை நடத்தியிருப்பார்கள். சில துணை வேந்தர்கள் பணியிடை நீக்கம் கூட செய்யப் பட்டிருக்கிறார்கள் ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவொரு நிகழ்வும் அப்படி நடக்கவில்லை என்றும் தனக்கு கீழ் நடக்கும் துணைவேந்தர் நியமனம் வெளிபடைத்தன்மையுடனே நடக்கிறது என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: October 9, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading