"அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் கொள்கைகளில் எவ்வித சமரசமும் இல்லை.." - வானதி சீனிவாசன் அதிரடி..
"அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் கொள்கைகளில் எவ்வித சமரசமும் இல்லை.." - வானதி சீனிவாசன் அதிரடி..
வானதி ஸ்ரீனிவாசன்
பாஜக-அதிமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது. வர வாய்ப்பும் இல்லை. கூட்டணிக்காக கருத்தில் சமரசம் செய்ய முடியாது என்று தேசிய மகளிரணி பாஜக தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, வானதி சீனிவாசன் முதல் முறையாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகம் மாபெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் பாஜகவின் வேல் யாத்திரை குறித்து வெளி வந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், கூட்டணியில் இருந்தாலும் எங்கள் கொள்கையில் சமரசம் இல்லை என்றும், தங்களுக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அதிமுக, பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்றும் கூட்டணியில் இருப்பதால் கொள்கைகளில் எவ்வித சமரசமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.