Home /News /tamil-nadu /

தமிழகத்தில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

தமிழகத்தில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

2 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு தற்போது கையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு தற்போது கையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு தற்போது கையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், கோடைக்கால மின் தட்டுப்பாடு குறித்து அனைவருக்கும் பயம் உள்ளது. ஆந்திராவில் மருத்துவமனைகளிலே மெழுவர்த்தி வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பஞ்சாபிலும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்க தமிழகம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் கோடை காலத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளார். அந்த வழிகாட்டுதலின் படி, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, அதன் அடிப்படையில் தேவையான அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

    Must Read : நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை குறிவைத்து கொள்ளை.. சேசிங் கொள்ளையர்கள் இருவர் கைது

    அதனால், இந்த ஏப்ரல், மே கோடை காலத்தில் தமிழகத்தை பொருத்தவரை மின்தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. சீரான மின் விநியோகத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.



    பல இடங்களில் டீசல் தட்டுப்பாடு என்பது ஒரு காரணமாக இருக்கிறது. இதனால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில், நிச்சயமாக மின்தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா?

    டீசல் தட்டுப்பாடு, நிலக்கரி தட்டுப்பாடு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு தற்போது கையில் உள்ளது. ஒரு நாளுக்கு நமக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால் 52 ஆயிரம் டன் அளவு மட்டுமே வரவுகள் உள்ளன. அதற்காக 4,80,000 டன் இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது இரண்டு மாதத்திற்கு மட்டுமே. இது விரைவில் இறுதி செய்யப்படும்.

    நிலக்கரி உற்பத்தி பெரும் பாதிப்பு அடைந்துள்ளதால் பஞ்சாபில் பெரும் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்படி நிலையில், நாம் எங்கிருந்து இறக்குமதி செய்ய உள்ளோம்?

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் டெண்டர் திறக்கப்படவில்லை. அதன் பின்னரே யார் யார் என்னென்ன விலைக்கு கேட்டுள்ளனர் என்பது தெரியவரும். அதனை இறுதி செய்ய இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Power cut, Senthil Balaji

    அடுத்த செய்தி