நாளை மறுநாள் முதல் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: April 15, 2019, 2:06 PM IST
நாளை மறுநாள் முதல் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
Web Desk | news18
Updated: April 15, 2019, 2:06 PM IST
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் நாளை மறு நாள் முதல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பநிலையை பொருத்த வரை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை. சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். மேலும் நாளை மறு நாள் முதல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Also see... 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்      

விஜய் தயாரிக்கும் முதல் படம்... ஹீரோயினாகும் வாணி போஜன்...!  

 

Loading...

Also see... தராசு தலையில் விழுந்து சசிதரூர் காயம்... துலாபாரம் வேண்டுதலின் போது விபத்து


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...