ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரம் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்...

அடுத்த 3 மணி நேரம் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்...

மழை

மழை

Weather update | மயிலாடுதுறை திருவாரூர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரம் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது.

    தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை  இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேப்போல் தமிழ்நாட்டின் இதர  மாவட்டங்களான  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி  மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Also see... தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? - விவரம் இதோ

    வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்படுள்ளது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Heavy Rainfall, Meteorological Center, Tamil Nadu, Weather News in Tamil