Home /News /tamil-nadu /

பகலில் கூட பெண்கள் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

பகலில் கூட பெண்கள் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அருளானந்தம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

  பகலில் கூட பெண்கள் அச்சமின்றி வெளியே செல்ல முடியாத நிலை இருப்பது வேதனையாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் 2019-ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கியது. கொங்கு மண்டலமே கொதித்தது. கல்லூரி மாணவிகள், பெண்கள் என பலரை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக படம் எடுத்த ஒரு கும்பல் அந்த வீடியோவை காட்டி தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டு வந்தது. வசதிபடைத்த வீட்டு பெண்களிடம் வீடியோவை காட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்டு வந்தது. கல்லூரி மாணவியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

  Also Read: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு காலக்கெடு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேரை காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  இந்தவழக்கானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி குற்றம் சாட்டப்பட்ட அருளானந்தம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

  Also Read: திடீர் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த அரசுப்பேருந்து..பதறவைக்கும் காட்சிகள் - மீட்புப்பணிகள் தீவிரம்

  இந்த வழக்கின் தீர்ப்பின் போது கருத்து தெரிவித்த நீதிபதி தண்டபாணி, பெண்கள் எந்த பயமும் இல்லாமல் இரவில் கூட வெளியில் செல்லக்கூடிய நாள் வரும்போதுதான், இந்த நாடு முழு சுதந்திரம் அடைந்ததாக தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறினார். ஆனால் நாடு சுதந்திரமடைந்த பிறகும், சமூக விரோத சக்திகளின் கைகளில் பெண்களின் பாதுகாப்பு சிக்கியுள்ளதால், பகலில் கூட பெண்கள் அச்சமின்றி வெளியே செல்ல முடியாத நிலை இருப்பது தான் பரிதாபகரமாக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பெண்களை இரையாக்கி தங்களை திருப்திபடுத்திக் கொள்ளும் இதுபோன்ற நபர்களை பார்க்கும்போது, ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம் வீணாகி விட்டதா என எண்ண தோன்றுகிறது. இதுபோன்ற வழக்குகளில் விரைவான மற்றும் நியாயமான தீர்வை நீதிமன்றத்தால் வழங்குவதன் மூலம், பாதுகாப்பான சூழலில் இருப்பதை பொதுமக்கள் மனதிலும், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவோம் என்ற அச்சத்தை குற்றம்புரிவோர் மனதிலும் விதைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Pollachi, Pollachi sexual harassment, Sexual abuse, Sexual harasment

  அடுத்த செய்தி