2-ம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்திற்கு வாய்ப்பு: அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறித்து முன்னுரிமை கொடுத்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

2-ம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்திற்கு வாய்ப்பு: அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி |
  • News18
  • Last Updated: February 11, 2019, 10:28 AM IST
  • Share this:
இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்திற்கு விரைவில் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘தமிழ்நாடு அரசிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பு தான் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எப்போது அனுமதி அளிக்கபடும் என உறுதியாக கூற முடியாது. ஆனால் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசீலித்து வருகிறோம். இந்த நிதி ஆண்டில் 140 கி.மீ தூரம் பணிகள் நடைபெறயுள்ளது. மேலும் 5 புதிய மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்ப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறித்து முன்னுரிமை கொடுத்து பரிசீலித்து வருகிறோம். மிக விரைவில் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

52 கிலோ மீட்டர் தூரதிற்கு 3 வழித்தடத்தில் அமைக்க தமிழக அரசு 25 சதவீதம் நிதியும், மத்திய அரசு 25 சதவீதம் நிதியும் , ஜெய்கா 50 சதவீத நிதி உதவியும் அளிக்கயுள்ளதாக கூறினார். மேலும் மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Also see... மதிமுக, பாஜக மோதல்... கைகலப்பில் முடிந்த கருப்புக்கொடி போராட்டம்
First published: February 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்