ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வணிக நோக்கத்திற்காக அமேசான் காட்டுக்கு தீ வைப்பு - ’பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன் கருத்து

மழைகாடுகளான அமேசான் காடுகளை அழிப்பது தொடர்ந்தால் மழைபொழிவு குறைவதுடன், சுற்றுசூழல் பாதிப்பு வெகுவாக ஏற்படும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

வணிக நோக்கத்திற்காக அமேசான் காடுகள் தீ வைத்து அழிக்கப்படுவதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் அமேசான் காடுகள் கடந்த மூன்று வாரங்களாக காட்டுத் தீயிக்கு இரையாகி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தீயை அணைக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என பிரேசில் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உலகின் நுரையீரல் எனப்படும் அமேசான் காடுகள் ஒட்டுமொத்தமாக 20 சதவிகித ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதாக கூறப்படுகிறது.

மழைகாடுகளான அமேசான் காடுகளை அழிப்பது தொடர்ந்தால் மழைபொழிவு குறைவதுடன், சுற்றுசூழல் பாதிப்பு வெகுவாக ஏற்படும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

காடுகள் அழிந்தால் அது சேமித்து வைத்திருக்கும் கரியமல வாயுவை அதிகளவு வெளியிடும். இது சுற்றுச்சூழலில் கலந்து மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் காடுகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பார்க்க...

First published: