Home /News /tamil-nadu /

வட மாவட்டங்களில் அதிதீவிர கனமழை எச்சரிக்கை

வட மாவட்டங்களில் அதிதீவிர கனமழை எச்சரிக்கை

மழை (கோப்புப் படம்)

மழை (கோப்புப் படம்)

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், நாகை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • News18
  • Last Updated :
வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காவிரி டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையை நோக்கி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரமாக நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியில் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், நாகை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் அந்த இடங்களில் 115 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Rain, Chennai, சென்னை வானிலை ஆய்வு மையம்
டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்


புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீரமைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சாரம் இன்றி இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதே போல், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கமலாபுரம், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததாலும் மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர். மழை எச்சரிக்கையை அடுத்து சிதம்பரம்,புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தங்கியுள்ள பொதுமக்களை மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிரார்கள்


இதற்கிடையே, சென்னை நுங்கம்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. காஞ்சிபுரத்தில் மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழச்சியடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, கனகம்மாசத்திரம், திருவலங்காடு உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் மிதமான மழைப்பொழிவு இருந்தது. இதே போல், புதுச்சேரியில் திருக்கனூர், மதகடிப்பட்டு, வில்லியனூர், மடுகரை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

Also see... கொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி!
Published by:Vaijayanthi S
First published:

Tags: Weather Forecast

அடுத்த செய்தி