ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

மழை

மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வருகிற 28-ம் தேதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

  வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் 28.11.2022ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

  Also see... கார்த்திகை தீபம்: எண்ணிக்கை.. திசை.. பலன்கள்.. பரணி தீபம் ஏற்றும்போது கவனிக்க வேண்டியவை.!

  இதில் மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Heavy Rainfall, Meteorological dept, Weather News in Tamil