அடுத்த 48 மணி நேரத்தில் இந்த பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

  • Share this:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தஞ்சாவூர் திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மத்திய மேற்கு வங்க கடல், ஆந்திர கடலோர பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதி, லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

அதனால், ஜூன் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கடல் அலை 3 முதல் 3.5 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் எழும்பக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Vaijayanthi S
First published: