தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப்படம்
  • Share this:
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின்‌ பெரும்பாலான பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் விதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காரைக்காலில் 3 சென்டி மீட்டர் மழையும் நாகப்பட்டினத்தில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.‌

மீனவர்களுக்கான எச்சரிக்கை


மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு தமிழகம் ஆந்திரா மற்றும் ஒடிசா கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசும்.

அதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா

 









First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading