Home /News /tamil-nadu /

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • News18
  • Last Updated :
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து உள்ளதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் 4 செ.மீ.மழையும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், செங்கல்பட்டு 3 செ.மீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 2 செ.மீ மழையும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தமிழகம் புதுவை சேர்த்து இன்று காலை நிலவரப்படி தென்மேற்குப் பருவமழை 13 சென்டிமீட்டர் கிடைக்க வேண்டியது. ஆனால் இன்று காலை நிலவரப்படி 9 செ.மீ மட்டுமே கிடைத்துள்ளது.

சென்னைக்கு 17 செ.மீ தென்மேற்கு பருவமழை இன்று காலை நிலவரப்படி கிடைக்க வேண்டியது, ஆனால் 25 செ.மீ அதிகமாக மழை பெய்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 11 செ.மீ மழை பெய்ய வேண்டியது ஆனால் 5 செ.மீ மழை பெய்துள்ளது. இது 53 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 செ.மீ மழை கிடைக்க வேண்டியது 26 செ.மீ.மழை அதிகமாக பெய்துள்ளது.

குறைவான மழை பெய்து உள்ள மாவட்டங்களான,

  • கோயம்புத்தூரில் 74 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.

  • தூத்துக்குடியில் 71 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.

  • பெரம்பலூர் 65 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.

  •  ராமநாதபுரம் 67 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது,


நாமக்கல் கோயம்புத்தூர் தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தைவிட தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் குறைவாக மழை பெய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் பதிவாக கூட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க... 'Man vs Wild' பியர் கிரில்ஸ் உடன் பிரதமர்... மோடியின் மறு பக்கம்...!




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Meteorological board, Monsoon rain

அடுத்த செய்தி