Home /News /tamil-nadu /

தமிழகத்தின் இந்த பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் இந்த பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், அதற்கு அடுத்த படியாக கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் நிதானமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கரூர்,மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலையானது 40 - 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை ஒட்டி இருக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறனர்.

    தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்று 5 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், அதற்கு அடுத்த படியாக கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.

    சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் இருக்கும்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Indian meteorological department, Rainfall, Weather Forecast

    அடுத்த செய்தி