தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரு நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
  • Share this:
வங்கக் கடலில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரு நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தற்போது மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 24 நேரத்தை பொறுத்த வரை வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மன்னார் வளைகுடா, வட தமிழக கடற்கரை பகுதிகள், ஆந்திர கடற்கரைப் பகுதிகள், மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதனால் அடுத்த இரு தினங்களுக்கு இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

இலங்கையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்

 

First published: June 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading