தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் மேக முட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
லேசான மழைக்கு வாய்ப்பு
  • News18
  • Last Updated: July 15, 2019, 2:27 PM IST
  • Share this:
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு வேலூர், திருவண்ணாமலை காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்ட நகர் பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் தருமபுரி மாவட்ட அரூரில் 8செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 6செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.


அதே போல் சேலம் மாவட்டம் ஆத்தூர், திருவண்ணாமலை, விருதுநகர், நாகை மற்றும் மதுரை மேட்டுப்பட்டியில் 5செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில்
மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசும்  பதிவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க... மழைநீர் சேமிப்பால் கோடையிலும் சமாளிக்கும் வேலூர் மருத்துவ தம்பதியினர்.

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்