ராஜபக்சே இலங்கை அதிபராவதற்கு வாய்ப்பிருக்கிறது - வைகோ

வைகோ (கோப்புப் படம்)

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் நடக்கப்போவதில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் நடக்கப்போவதில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது அவர், இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்கப் போவது கிடையாது. ஒருவேளை ராஜபசே வெற்றி பெற்றால் இலங்கை அரசின் சட்டத்தை திருத்தி அதிபர் பதவியிலிருந்து சிறிசேனாவை கழற்றிவிட்டு கோத்தபய ராஜபக்சே அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதை அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். ராஜபக்சே அதிகாரத்திற்கு வந்துவிட்டால் தமிழர்களின் பண்பாட்டுத் தளங்கள் அழிக்கப்பட்டு தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் அரங்கேறும்.

இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை தமிழ் மாகாண சபைத் தலைவர் விக்னேஸ்வரன் கொண்டுவந்த தீர்மானம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்கள் நலனுக்காக செயல்படவில்லை. அவர்கள் முழுவதுமாக சிங்களர் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

இலங்கை அரசை கலைத்ததை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை வழக்கு தொடரப்பட்டால் இலங்கை அரசு கலைத்தது செல்லாது என்றும் அறிவிப்பு வரலாம். ஏனென்றால் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை களைப்பதாக இருந்தால் நான்கு ஆண்டு காலம் முடிய வேண்டும் என்று சட்ட விதி உள்ளது. ஆனால் அந்தச் சட்டத்தை மீறி தான் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது.

தமிழக மீனவர் நலன் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை கிடையாது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்டிப்பதற்கும் இந்த சட்டத்தை விளக்குவதற்கும் நானே நேரில் பிரதமரிடம் சென்று இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதிலிருந்து தமிழக மீனவர்களின் மீது மோடிக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது என்று வைகோ கூறினார்.

இது தொடர்பான செய்திகள்:

கட்சி மாறிய ராஜபக்சே... நடுத்தெருவில் சிறிசேனா: என்னதான் நடக்கிறது இலங்கை அரசியலில்?

Published by:Ilavarasan M
First published: