தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 4 செ.மீ.மழை மழை பதிவாகி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கொல்லிடம் ஆனைக்காரன் சத்திரம் ஆகிய பகுதிகளில் 4 சென்டி மீட்டர் மழை மழை பதிவாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசில் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...சென்னையில் விலை உயர்ந்த நாய்களை காரில் கடத்தும் நபர்கள்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.