அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • Share this:
தெற்கு அந்தமான் கடலில் 12 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த பகுதியால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தெற்கு தீப கற்ப பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கில் நகர்ந்து பின்னர் வட கிழக்கு திசையில் மாறி மியான்மரை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் நேரடி தாக்கம் இல்லை என்றாலும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கேரளா, கடலோர கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


குறிப்பாக கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி துவங்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பருவ மழைக்கு முன்பாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...











Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading