தமிழகத்தில் நேற்று பரவலாக பெய்த மழை... அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு...!

அடுத்த இரண்டு வாரங்களுக்கு  இந்தியாவில் மழையின் அளவு அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 26, 2019, 7:41 AM IST
தமிழகத்தில் நேற்று பரவலாக பெய்த மழை... அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு...!
மழை
Web Desk | news18
Updated: July 26, 2019, 7:41 AM IST
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அதேபோல், தமிழகத்தின் சிவகங்கை, விருதுநகர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

வெப்பச்சலனம் காரணமாகவும், தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாகவும் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையம் முன்பு கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஆவியூர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் அங்குள்ள குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Loading...

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென வானில் மேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. சூளகிரி, வேப்பனபள்ளி, காவேரிபட்டினம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை பொதுமக்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்தது.

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த கனமழை

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேரங்களி்ல் இடி மின்னலுடன் மழை பெய்தது. நுங்கம்பாக்கம், வடபழனி, மீனம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் நீர் தேங்கியது. அதேபோல், சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளான பூந்தமல்லி, மாங்காடு, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளும் இடியுடன் கனமழை பெய்தது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கில் சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக 2 நாட்களுக்கு வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளதாக கூறியுள்ள பாலச்சந்திரன், தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட 29 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு  இந்தியாவில் மழையின் அளவு அதிகரிக்கும் 

கடந்த 2 வாரங்களில் இந்தியாவில் சராசரி அளவை விட குறைவான மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு சராசரி விகித்தை விட அதிக அளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also see... VIDEO காதலி வீட்டில் கணவனை பிடித்து தர்ம அடி கொடுத்த மனைவி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...