சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டிய தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாக மேல் நடவடிககை எடுக்க இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய அவர், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில்
21 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார்.
கந்துவட்டிகாரர்கள் போல் சுங்கச்சாவடிகள் வசூல் செய்வதாகவும், தமிழக மக்கள் மீது பொருளாதார தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்தார்.
Also Read : தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மீண்டும் தவணை முறையில் வீடுகள்: அரசு தகவல்!
அதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். சென்னை நகரப்பகுதியை சுற்றியுள்ள பரனூர், நெமிலி ,சென்னசமுத்திரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற விரைவில் ஒன்றிய அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் எ.வ.வேலு பதிலளித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாகவும் ஒன்றிய அமைச்சரை சந்திக்கும் போது வலியுறுத்தப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.