இன்றைய தமிழ் தேசிய கருத்தியல் அண்டை மாநிலங்களோடு பகையை உண்டாக்கும் - திருமாவளவன்

திராவிடம் என்பது சாதியத்தை கடந்தது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்தேசியம் அண்டை மாநிலங்களோடு பகையை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது

இன்றைய தமிழ் தேசிய கருத்தியல் அண்டை மாநிலங்களோடு பகையை உண்டாக்கும் - திருமாவளவன்
திருமாவளவன் எம்.பி.,
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2019, 3:02 PM IST
  • Share this:
அண்டை மாநிலங்களோடு பகையை உண்டாக்கக் கூடிய வகையில் இன்றைய தமிழ்தேசிய கருத்தியல் கட்டமைக்கபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கவுதம சன்னா எழுதிய இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் எழுத்துக்களும் தொகுப்புகளும், கலகத்தின் மறைபொருள் உள்ளிட்ட 4 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், ”திராவிட அரசியல் பெரியாரில் இருந்து தொடங்கியதாக இன்றைய அரசியல் கூறுகிறது. ஆனால் ஆரியம், திராவிடம் என்ற சொல் பெரியாருக்கு முன்பே இரட்டை மலை சீனிவாசனால் உச்சரிக்கப்பட்டதாக கூறினார்.


இரட்டை மலை சீனிவாசன் பற்றி திராவிட இயக்கங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டது என்று கூறுவதை விட, அவரைப்பற்றி இத்தனை ஆண்டுகள் தலித் அமைப்புகள், தலைவர்கள் ஏன் அவரை பொதுதளத்திற்கு கொண்டு சேர்க்கவில்லை என்பதை சுய மதிப்பீடு செய்ய வேண்டும்.

திராவிடம் என்பது சாதியத்தை கடந்தது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்தேசியம் அண்டை மாநிலங்களோடு பகையை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

நிகழ்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், பச்சை தமிழகம் கட்சியின் சுப.உதயகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

First published: September 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading