முகப்பு /செய்தி /தமிழ்நாடு / EXCLUSIVE: தென்காசி தீண்டாமை கொடுமை: கைதானவர்களை ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு... முக்கிய சட்டப்பிரிவைப் பயன்படுத்தப் போவதாக தகவல்

EXCLUSIVE: தென்காசி தீண்டாமை கொடுமை: கைதானவர்களை ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு... முக்கிய சட்டப்பிரிவைப் பயன்படுத்தப் போவதாக தகவல்

தென்காசி தீண்டாமை விவகாரம்

தென்காசி தீண்டாமை விவகாரம்

குற்றம்சாட்டப்பட்டோரை குறிப்பிட்ட காலத்திற்கு அப்பகுதியில் இருந்து வெளியேற்ற முடிவு எனத் தகவல்

  • Last Updated :
  • Chennai, India

சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமை விவகாரத்தில் எஸ்.சி, எஸ்டி சட்டத்தின் கீழ் முக்கிய பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்குக்கான விசாரணை தற்போது வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ஒரு பிரிவு ஊர் சமுதாய மக்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த முடிவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் கடைகளில் கொடுக்கக் கூடாது எனவும் தீர்மானம் பட்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் ஒரு பிரிவு ஊர்நாட்டமை மகேஷ்குமார் என்பவர் கடைக்கு வந்த ஒரு பிரிவு பள்ளி மாணவர்கள் வந்து திண்பண்டம் வாங்க வந்தபோது உங்களுக்கு பொருட்கள் தரமாட்டோம் என கூறிய காட்சி வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் பதிவிட்ட காட்சி வைரலாகி வருகின்றது. இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஊர் தலைவர் மகேஷ் குமார் மற்றும் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,இந்த விவகாரத்தில் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும் இந்த பிரிவை பயன்ப்படுத்தினால் குற்றம் சாட்டப்பட்டோர் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த ஊரில் நுழைய தடை விதிக்கப்படும் என தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Scheduled caste, Tenkasi, Viral Video