Home /News /tamil-nadu /

இனி தேனியிலிருந்து சபரிமலைக்கு இந்த வழியாக போக முடியாது - காவல்துறை அறிவிப்பு

இனி தேனியிலிருந்து சபரிமலைக்கு இந்த வழியாக போக முடியாது - காவல்துறை அறிவிப்பு

தேனியிலிருந்து சபரிமலை செல்லும் போக்குவரத்தில் மாற்றம் - காவல்துறை அறிவிப்பு

தேனியிலிருந்து சபரிமலை செல்லும் போக்குவரத்தில் மாற்றம் - காவல்துறை அறிவிப்பு

தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் வாகனப் போக்குவரத்து நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜை துவங்கியுள்ளைதை அடுத்து ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக நாள்தோறும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குமுளி மலைச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாளை முதல் பக்தர்கள் போக்குவரத்தில் தேனி மாவட்ட காவல் துறை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    அதன் படி தேனியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கம்பம் மெட்டு, ஆனையார், புளியமலை, கட்டப்பணை, குட்டிக்கானம், முன்டக்காயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    Also Read : மார்கழி பிரதோஷம்... சிவனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

    ஐயப்பன் கோவிலில் இருந்து திரும்பும் பக்தர்கள் குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப் பெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் வழியாக தேனி வர வேண்டும்.

    மேற்கண்ட போக்குவரத்து வழித்தட மாற்றத்தினை ஒழுங்குபடுத்தும் பொருட்டும், பக்தர்கள் வாகனங்களுக்கு வழித்தடம் மற்றும் தகவல் தெரிவிப்பதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி