முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேனி நியூட்ரினோ திட்டப் பகுதி.. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல- மத்திய அரசு அறிவிப்பு

தேனி நியூட்ரினோ திட்டப் பகுதி.. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல- மத்திய அரசு அறிவிப்பு

வனப் பகுதியின் வரைபடம்

வனப் பகுதியின் வரைபடம்

இந்தப் பகுதியில் இருந்து 4.9 கிலோ மீட்டர் தூரப் பகுதியில்தான், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

  • Last Updated :

தேனி அருகே நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ள தமிழக பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள உடும்பஞ்சோலை வனப்பகுதியில் 1286 ஹெட்டர் பரப்பளவில் உள்ளது மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என கடந்த 1987 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது, அறிவிக்கப்பட்ட பகுதியின் மேற்கு, தெற்கு, வடக்கு எல்லைகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தப் பகுதியில், தொழில் நிறுவனங்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக எல்லையில் இருக்கும் இந்த வனப்பகுதியானது பாதுகாக்கப்பட்ட பகுதி அல்ல என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கின்றது. இந்தப் பகுதியில் இருந்து 4.9 கிலோ மீட்டர் தூரப் பகுதியில்தான், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் இத்திட்டத்தை தேசிய வனவுயிர் வாரிய அனுமதி இல்லாமல் தொடங்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. TIFR வனவுயிர் வாரிய அனுமதிகோரி விண்ணப்பம் செய்தபோது, கேரள அரசின் கருத்தை பெற முடியவில்லை.

ஏற்கெனவே மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருப்பதால், அதன் எல்லைகள் தெரியாமல் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவிலிரும்து 4.9கிமீ தொலைவில் வரவுள்ள நியுட்ரினோ திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என கேரள அரசு கூறியிருந்தது.

தற்போது, மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா இருக்கும் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், விரைவில் தேசிய வன உயிர் வாரியம் நியுட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகின்றது.

First published:

Tags: Neutrino Project