• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA இருந்திருந்தால் தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்திருக்காது - எம்.பி. ரவீந்திரநாத் குமார் பேச்சு

CAA இருந்திருந்தால் தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்திருக்காது - எம்.பி. ரவீந்திரநாத் குமார் பேச்சு

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார்

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார்

  • News18
  • Last Updated :
  • Share this:
குடியுரிமை சட்டம் இருந்திருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவம் நடந்து இருக்காது என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தேனி எம்.பி. ரவீந்தரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ரவீந்திரநாத் குமார், "குடியுரிமைச் சட்டம் அனைத்து நாடுகளில் இருப்பதாகவும் நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் இருப்பதாகவும் கூறினார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மும்பை தாஜ் ஹோட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் அத்துமீறி உள்ளே நுழையாமல் இருப்பதற்கு குடியுரிமை சட்டம் அவசியம் என்பதால்தான் பிரதமர் மோடி அதை கொண்டு வந்துள்ளார் என்றும் அவர் ரவிந்த்ரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: