அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத். அவர்,
தேனி தொகுதியின் எம்.பியாகவும் இருந்துவருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு அ.தி.மு.க எம்.பி அவர்தான்.
இந்தநிலையில் மாநில வளர்ச்சிக்குழுக் கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுகரசர், அதிமுக எம்.பி ஓ.பி ரவிந்திரநாத் உள்ளிட்ட அனைத்து கட்சி மக்களவை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஆலோசனை வழங்குங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் மீண்டும் சர்ச்சைகள்- குழப்பங்கள் தொடரும் மதுரை மாநகராட்சி
இந்தக் கூட்டம் முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது அறைக்குச் சென்றுவிட்டார். அதனையடுத்து, மு.க.ஸ்டாலினை அவரது அலுவலக அறைக்கே சென்று ஓ.பி.ரவீந்திரநாத் சந்தித்தார். அப்போது, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் செய்துதர வேண்டும் என்றும், தேனி மக்களவை தொகுதிக்கான மற்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வரிடம் அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் பாரதியார் கவிதைகள் புத்தகத்தையும் முதல்வருக்கு எம்.பி., ரவீந்திரநாத் பரிசாக அளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.