மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்: தேனியில் பரபரப்பு
மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்: தேனியில் பரபரப்பு
கர்ப்பக் காலத்தில் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். அதனை சரிசெய்ய உதவிகள் தேவைப்பட்டால் யோசிக்காமல் கணவரிடமோ, குடும்பத்தினரிடமோ கேட்பதில் தவறில்லை.
தேனி அருகே காதல் மனைவிக்கு கணவரே வீட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். இயற்கை மருத்துவத்தில் ஆர்வமுடைய கண்ணன் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்துக்கு முன்பு தன் நிறை மாத கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நேற்று கண்ணனின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட உறவினர்களும் ஊர் மக்களும் கண்ணனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பிறகு நேற்று இரவு தனது மனைவிக்கு வீட்டிலேயே கண்ணன் பிரசவம் பார்த்துள்ளார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியைத் துண்டிக்க கண்ணன் மறுத்துள்ளார். இயற்கை முறை மருத்துவப்படி தொப்புள் கொடி ஒரு வாரத்தில் தானாக உதிர்ந்துவிடும் என்று தனக்கு தன் தாத்தா கூறியதாக கண்ணன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவர்கள் சிலர் தொப்புள் கொடியை துண்டிக்காமல் விடுவது ஆபத்து என்று கூறியவுடன் கண்ணன் மனம் மாறியுள்ளார்.
தற்போது தாயும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் உள்ளார்கள். இதைக் கேள்வி பட்ட சுகாதாரத் துறையினர் கண்ணன் வீட்டிற்கு விரைந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதிக்க வலியுறுத்தியுள்ளனர். இதை கண்ணன் விடாப்பிடியாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டுக்கருகில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே திருப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் யூடியூப் வீடியோ உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால், அந்தப் பெண் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Saravana Siddharth
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.