மழை வேண்டி தவிக்கும் தேனி விவசாயிகள்... ரூ.10,000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்...!

பருவமழை பொய்த்து போனதால் காய்க்கும் தருவாயில் இருக்கும் முருங்கை மரங்களை காப்பற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

Web Desk | news18
Updated: July 27, 2019, 8:11 AM IST
மழை வேண்டி தவிக்கும் தேனி விவசாயிகள்... ரூ.10,000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்...!
முருங்கை விவசாயம்
Web Desk | news18
Updated: July 27, 2019, 8:11 AM IST
மானாவாரி நிலத்தில் பயிரிடப்பட்ட முருங்கை மரங்களை வறட்சி பிடியில் இருந்து காப்பாற்ற விலைக்கு தண்ணீர் வாங்குகின்றனர் தேனி மாவட்ட விவசாயிகள்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கண்டமனுார், கடமலைக்குண்டு வெங்கடாசலபுரம் அழகாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் மழையை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது.

10,000 ஏக்கரில் முருங்கை, பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களை மானாவாரியாக சாகுபடி செய்து வருகின்றனர்.


பருவமழை பொய்த்து போனதால் காய்க்கும் தருவாயில் இருக்கும் முருங்கை மரங்களை காப்பற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

அறுவடை காலத்தில் ரூ.10,000 விலை கொடுத்து வாங்கிய தண்ணீரை தொட்டியில் சேகரித்து வைத்துக் கொள்வதாகவும், அதனை பணியாட்களை கொண்டு ஒவ்வொரு மரங்களுக்கும் ஊற்றி காப்பாற்றி வருவதாக கூறும் விவசாயிகள், மழைபெய்தால் மட்டுமே தங்களது முருங்கைளை காக்கமுடியும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Also Watch: 10 நாட்களில் கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்... தொடரும் சதுரங்க வேட்டை..

Loading...

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...