Home /News /tamil-nadu /

திருமணமான 22-வது நாளில் கணவரைக் கொல்ல திட்டமிட்ட புதுமணப்பெண்... அதிச்சியூட்டும் தகவல்

திருமணமான 22-வது நாளில் கணவரைக் கொல்ல திட்டமிட்ட புதுமணப்பெண்... அதிச்சியூட்டும் தகவல்

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

திருமணமான 22வது நாளில் கணவரை கொல்ல திட்டமிட்ட மனைவியும், 75 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரை கொல்ல முயன்ற கூலிப்படையினரும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    திருமணமான 22-வது நாளில் புதுமணப்பெண் ஒருவர் கணவரைக் கொல்ல திட்டமிட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் கூலிப்படையினர் 5 பேரை கைது செய்துள்ளனர்.

    தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் கவுதம் (வயது 24) என்பவர் கேபிள் டிவி ஊழியராக இருந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (21)என்பவருக்கும் இடையே, கடந்த மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி புவனேஸ்வரி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    Also Read : செல்போன் கடையில் அரிவாள் வெட்டு - பரபரப்பு காட்சிகள்

    இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விபரம்- புவனேஸ்வரிக்கு, தொடக்கத்தில் இருந்தே கவுதமை பிடிக்கவில்லை. வேலை பார்ப்பவரையே திருமணம் செய்து கொண்டு, தானும் வெளியில் சென்று வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினார். எனவே அவர் கவுதமை கொலை செய்ய திட்டமிட்டார்.

    புவனேஸ்வரி போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்த போது, நிரஞ்சன் (22) என்பவருடன் அவர் நட்பாக பழகி இருந்தார். இந்தநிலையில் புவனேஸ்வரி தனது நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.75 ஆயிரம் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை நிரஞ்சனிடம் கொடுத்து, தான் கணவரை காரை ஏற்றுக் கொல்ல திட்டமிட்டுள்ளார்.

    இதன்படி திருமணமான 22-வது நாளில், அதாவது கடந்த 2-ந்தேதி புவனேஸ்வரி கணவரை, ஸ்கூட்டரில் வெளியில் அழைத்து வந்தார். அப்போது பின்னால் ஒரு கார் வேகமாக வந்து கவுதமின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் காயம் இன்றி அவர் உயிர் தப்பினார்.

    Also Read : கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4வது திருமணம் செய்த பஸ் கண்டக்டர் கைது!

    இந்த சமயத்தில் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கவுதமை கீழே தள்ளி கால்களால் மிதித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து காரின் கேரள பதிவெண்ணை அடிப்படையாக வைத்து, கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கவுதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிய கார் மற்றும் 5 பேர் கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

    இது, புவனேஸ்வரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கணவரை கொலை செய்ய தான் திட்டம் போட்டது போலீசுக்கு தெரிந்து விடும் என்று அவர் அச்சம் அடைந்தார். இதையடுத்து புவனேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனிடையே கவுதம் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், புவனேஸ்வரிக்கு ஏற்கனவே பழக்கமான நிரஞ்சன், அவரது நண்பர்களான கோவிந்தன்பட்டியை சேர்ந்த மனோஜ் (20), சத்யா (21), பிரதீப் (37) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கூலிப்படை போல செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

    திருமணமான 22வது நாளில் கணவரை கொல்ல திட்டமிட்ட மனைவியும், 75 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரை கொல்ல முயன்ற கூலிப்படையினரும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Theni

    அடுத்த செய்தி