Home /News /tamil-nadu /

EXCLUSIVE: முல்லைப் பெரியாறு ஆற்றில் அதிகார பலத்தை பயன்படுத்தி தண்ணீர் திருட்டு - கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்!

EXCLUSIVE: முல்லைப் பெரியாறு ஆற்றில் அதிகார பலத்தை பயன்படுத்தி தண்ணீர் திருட்டு - கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்!

முல்லைப் பெரியாறில் தண்ணீர் திருட்டு

முல்லைப் பெரியாறில் தண்ணீர் திருட்டு

கடைமடைப்பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்திற்கு முழுமையாக முல்லைப் பெரியாறு தண்ணீர் சென்றடைவதில்லை. தலைமதகான தேனி மாவட்டத்திலேயே தண்ணீர் திருடப்படுகிறது.

  முல்லைப் பெரியாறு ஆற்றில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நமது நியூஸ் - 18 தமிழ்நாடு செய்திகளுக்காக மேற்கொண்ட கள ஆய்வு குறித்த சிறப்பு தொகுப்பு. 

  தமிழகத்தில் தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்வது கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள ஏறக்குறைய 2லட்சத்து 19ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன.   இவற்றில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் இரு போக சாகுபடி நடைபெறுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

  அணையில் இருந்து ராட்சத குழாய்கள் வழியாக கொண்டு வரப்படும் தண்ணீர், முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான தேனி மாவட்டம் லோயர்கேம்ப், கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கோட்டூர், வீரபாண்டி வழியாக அரண்மனைப்புதூரில் கொட்டக்குடி ஆற்றில் கலந்தும், பின்னர் குன்னூரில் வைகையில் சங்கமித்தும் இறுதியில் வைகை அணையில் தேக்கப்படுகிறது.

  Also Read:  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை வரும்?

  இந்நிலையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் சில இடங்களில் திருடப்படுகிறது. ஆற்றங்கரைகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் அமைத்து தரை வழியாக  குழாய்கள் பதித்து பல கிலோ மீட்டர் தூரம் வரை கொண்டு சென்று அதனை விவசாய பயன்பாட்டிற்கு அல்லாமல் வணிக ரீதியாக தண்ணீர் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கடைமடைப்பகுதியான இராமநாதபுரம் மாவட்டம் வரையில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றத்தின்  அனுமதியை போராடிப் பெற்றோம். ஆனால் அதன் நோக்கம் இன்று நிறைவேறாமல் இருக்கிறது, காரணம் கடைமடைப்பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்திற்கு முழுமையாக முல்லைப் பெரியாறு தண்ணீர் சென்றடைவதில்லை. தலைமதகான தேனி மாவட்டத்திலேயே தண்ணீர் திருடப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் காட்டாமல் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  Also Read:    ஜப்பானை மிரட்டும் டெல்டா வேரியண்ட்.. டோக்யோவில் அவசர நிலை பிரகடனம்: ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்ன பாதிப்பு?

  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கு பெரும்பாலும் கால்வாய்கள் வழியாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் பாசனப்பகுதி விவசாயிகள் யாரும் இது போன்ற திருட்டுச் செயல்களில் ஈடுபடுதில்லை. மாறாக விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் ஆட்சி, அதிகார பலத்துடன் மோட்டார்கள் அமைத்து இது போன்று செய்து வருகின்றனர்.   அதுவும் 7 ஹெச்.பி இழுவைத்திறனுக்கு அனுமதி பெற்றுக் கொண்டு 15 ஹெச்.பி இழுவைத்திறனுள்ள மோட்டார்களை அமைத்து ஆற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சி விற்று வருகின்றனர்.

  Also Read:  தோனிக்கு 40 வயசு.. 2021 ஐபிஎல் தான் அவரின் கடைசி போட்டியா?

  இதனால் நீர் இருப்பு குறைவதோடு மட்டுமல்லாது மின்சாரத்துறைக்கும் இழப்பீடு ஏற்படுகிறது. அதனை மின்சாரம், பொதுப்பணித்துறையினர் முறையாக கள ஆய்வு செய்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறும் தேனி மாவட்ட விவசாயிகள்,    அம்ரூத் திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக பல ஆயிரம் கோடி மதிப்பில் குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்வதை பரிசீலனை செய்ய வேண்டும் என்கின்றனர். காரணம் குழாய்கள் வழியாக தண்ணீர்  கொண்டு செல்லப்பட்டால் கோடை காங்களில் நீர் இருப்பு குறைந்து ஆற்று வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்து இப்பகுதி பாலைவனம் ஆகிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முல்லைப் பெரியாற்று பகுதிகளில் தண்ணீர் திருட்டு நடைபெறும் புகார் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, இது குறித்து மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் நம்மிடையே தெரிவித்தார்.   குடிநீர், பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரை சட்டவிரோதமாக மோட்டார்கள் அமைத்து திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்ணீர் திருட்டை தடுத்திட வேண்டும்; என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

  செய்தியாளர்: சுப. பழனிக்குமார், தேனி
  Published by:Arun
  First published:

  Tags: Cumbum, Exclusive, Mullai Periyar, Theni, Vaigai

  அடுத்த செய்தி