மதுரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியும், பாஜக மீனவரணி முன்னாள் மாநில செயலாளருமான போடி பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடி அமராவதி நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன். மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியான பார்த்திபன் அவரைப் போலவே கழுத்தில் நகைகள் அணிந்து தாதா போல் போடியில் வலம் வந்தார். கட்டப்பஞ்சாயத்து, நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தியது, கொள்ளை என தமிழகத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் பார்த்திபன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அவற்றில் போடியில் மட்டும் நான்குக்கு மேற்பட்ட வழக்குகள் இருந்து வருகிறது. இதனால் காவல்துறையினரால் கண்காணிக்கப்படும் ரவடிகள் பிரிவில் பார்த்திபன் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் இந்த ஆண்டு துவக்கத்தில் திடீரென பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பார்த்திபனுக்கு சில மாதங்களிலேயே மாநில மீனவரணி செயலாளராகவும் பதவி வழங்கப்பட்டது. அதன் பின் சில வாரங்களிலேயே பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனிடையே போடியை சேர்ந்த பாலு(66) என்பவர் ரூபாய் 10 லட்சம் கேட்டு தனது மகனை கொலை செய்து விடுவதாக பார்த்திபன் மிரட்டல் விடுத்ததாக 2021ஆம் ஆண்டு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 7மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பார்த்திபன் போடிக்கு வந்துள்ளார். இந்நிலையில் போடி அருகே நேற்று ரோந்து சென்ற போது கரட்டுப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் இருந்த பார்த்திபனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: பழனிகுமார் (தேனி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.