• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பன்னீர் செல்வத்துக்கு கைகளைப் பற்றி ஆறுதல் கூறிய டிடிவி தினகரன்!

பன்னீர் செல்வத்துக்கு கைகளைப் பற்றி ஆறுதல் கூறிய டிடிவி தினகரன்!

டிடிவி தினகரன் ஆறுதல்

டிடிவி தினகரன் ஆறுதல்

விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள  ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் சென்றார்.

  • Share this:
    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி நேற்று காலை உயிரிழந்த நிலையில், பெரியக்குளத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66). கடந்து ஒரு வாரம் வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், நேற்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

    விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சசிகலா நடராஜன், திருமாவளவன், சீமான்,  அண்ணாமலை உட்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மனைவியை இழந்துவாடும் பன்னீர்செல்வத்துக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: கண்கலங்கிய ஓ.பி.எஸ்... கரம் பிடித்து ஆறுதல் தெரிவித்த சசிகலா


    இதையடுத்து விஜயலட்சுமியின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.  விஜயலட்சுமியின் உடலுக்கு அதிமுக மற்றும்  மாற்று அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மேலும் படிக்க: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மீண்டும் தவணை முறையில் வீடுகள்: அரசு தகவல்!


    இந்நிலையில்,  விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள  ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயலட்சுமியின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.



    பின்னர், பன்னீர் செல்வத்தின் கைகளைப் பற்றிக்கொண்ட டிடிவி தினகரன் அவருக்கு ஆறுதல் கூறினார். பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திர நாத் உள்ளிட்ட குடும்பத்தினரும் டிடிவி தினகரன் ஆறுதல் கூறினார். இன்று காலை 10 மணிக்கு விஜயலட்சுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: