ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

பள்ளி விடுமுறை

பள்ளி விடுமுறை

Weather update | பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Theni | Theni Allinagaram

  தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

  இதையும் படிங்க | பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு... நவம்பர் 8 வரை ஆன்லைன் வகுப்பு..நொய்டாவில் காற்று மாசு காரணமாக நடவடிக்கை

  இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், விடுமுறை தினமான இன்று தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை சனிக்கிழமை 05.11.2022 அன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை தினமாகும். வடகிழக்கு பருவமழையால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Heavy rain, North east monsoon rain, Northeast monsoon, School Leave, Weather News in Tamil