அதிவேகமாக வந்த கார்.. சாலையில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

தேனி சாலை விபத்து

கம்பம் சாலையில் அதிவேகமாக வந்த கார் விபத்து ஏற்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

 • Share this:
  தேனியில் இரு சக்கரவாகனத்தில் வந்தவர்கள் மீது அதிவேகமாக மோதி விபத்து ஏற்படுத்திய கார் சாலையில் நின்றிருந்த பெண்மணி மீதும் மோதியதில் ஓட்டுநர் உள்பட 4பேர் காயம் வெளியான அதிர்ச்சி வீடியோ. 

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர்கள் கருப்பையா(19) மற்றும் சூர்யா(24).  இவர்கள் கடந்த ஜூலை 29ஆம் தேதியன்று மாலை உத்தமபாளையம் - கம்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில்  வந்து கொண்டிருந்த போது கம்பத்தில் இருந்து க.புதுப்பட்டி நோக்கி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சூர்யா படுகாயம் அடைந்தார்.

  Also Read: மிஸ்ட்கால் சகோதரன்.. திடீர் காதலன் - இளம்பெண் புகாரால் காதல் மன்னன் கம்பி எண்ணும் பரிதாபம்

  மேலும் காரில் வந்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லமுத்து(62) ஓட்டுநரான க.புதுப்பட்டி ஜாமால்மைதீன்(36) ஆகிய இருவர் காயமடைந்ததோடு மட்டுமல்லாது சாலையில் நின்றிருந்த அனுமந்தன்பட்டி பாக்கியம்(50) என்ற பெண்மணியும் காயமடைந்தார். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உத்தமபாளையத்தில் முதல் சிகிச்சையும், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  இந்த சம்பவத்தில் காயமடைந்த பாக்கியம் என்பவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சூர்யா என்பவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், செல்லமுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Also Read: Ration card | லஞ்சம் இல்லாமல் ரேஷன் கார்டு பெற முடியாது.. 300 ரூபாய் முதல் 3000 வரை செலவாகிறது - ஸ்மார்ட்டா கல்லா கட்டும் அரசு அதிகாரிகள்.. புலம்பும் சாமானியர்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் தவறான திசையில் மேற்கு நோக்கி திடீரென திருப்பப்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பந்தாடுவது போல தூக்கி எறியப்படும் காட்சிகள் நெஞ்சை படபடக்க வைக்கிறது. மேலும் சாலையில் நின்றிருந்த பெண்மணி மீது மோதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: பழனிகுமார் ( தேனி)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: