Home /News /tamil-nadu /

Penny cuick: ஆங்கிலேய பொறியாளரை தெய்வமாக கருதி பொங்கல் வைத்து வழிபடும் தேனி மக்கள்

Penny cuick: ஆங்கிலேய பொறியாளரை தெய்வமாக கருதி பொங்கல் வைத்து வழிபடும் தேனி மக்கள்

john pennycuick

john pennycuick

பென்னி குயிக்-ன் 181வது பிறந்த நாளான இன்று தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  முல்லைப் பெரியாறு அணையை கட்டி ஐந்து மாவட்டங்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்த பென்னிகுயிக்-ன் 181வது பிறந்த நாளை ஜாதி, மத பேதமின்றி பொங்கல் வைத்து, இனிப்புகள் வழங்கி, கடவுளுக்கு நிகராக வழிபாடு நடத்தி நன்றிக் கடன் செலுத்திய மக்கள்.

  தேனி, மதுரை, திண்டுக்கல் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை.‌ 18ஆம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் நிலவிய கடும் பஞ்சத்தை போக்க தனது சொத்துக்களை விற்று பல்வேறு இடர்பாடுகளை சமாளித்து முல்லைப் பெரியாறு அணை கட்டித் தந்தவர் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்.

  இதனால் தென் தமிழகத்தின் தாகம் தீர்த்த தந்தையாக பென்னி குயிக் வணங்கப்படுகிறார். அவரது பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதியன்று தேனி மாவட்டம் இன்றி ஐந்து மாவட்ட மக்கள், விவசாயிகளால் சமத்துவப் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.

  பென்னி குயிக் மணிமண்டபம் - லோயர் கேம்ப், தேனி மாவட்டம்


  பென்னி குயிக்-ன் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்-ல் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டது. மேலும் பென்னிகுயிக்-கிற்கு மகுடம் சூட்டும் விதமாக அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றன.

  Also read:  ‘என்ன வச்சு காமெடி பன்னிட்டாங்க..’ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கதறி அழுத அரசியல் கட்சி பிரமுகர்!

  இந்நிலையில் பென்னி குயிக்-ன் 181வது பிறந்த நாளான இன்று தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கொரோனா நோய் பரவலால் அரசு விதித்த கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் லோயர் கேம்ப்-ல் உள்ள பென்னி குயிக் மணிமண்டபத்தில் குவிந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.   மணிமண்டபத்தில் பொங்கல் வைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய பொதுமக்கள்,  பென்னி குயிக் சிலைக்கு தீபாராதனை காட்டி கடவுளாக வழிபட்டனர்.

  பென்னி குயிக்  அவரது உருவப் படத்திற்கு  மாவட்ட ஆட்சியர் முரளீதரன் அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.‌ அவரைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள்  கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம்-சரவணகுமார், ஆண்டிபட்டி- மகாராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பென்னி குயிக்-ன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  பொங்கல் வைத்து வழிபடும் மக்கள்


  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேரில் வருகை தந்து பென்னி குயிக்-ன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  Also read: மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபர்! இழப்பீடு வழங்க உத்தரவு

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்., தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்-கிற்கு லோயர் கேம்பில் நினைவு மண்டபம் எழுப்பியும் தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு அவர் பெயர் சூட்டியும் கவுரவித்தார் எனக் கூறினார்.

  பென்னிகுயிக் அரசு விழாவில் அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்விக்கு அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.

  லண்டனில் பென்னி குயிக்-கிற்கு சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, லண்டனில் உள்ள அவரது கல்லறை பழுதான போது அதிமுக அரசுதான் அதைச் பராமரித்தது. இன்று லண்டனில் சிலை நிறுவுவதற்கு தொடர்ந்து அந்த முயற்சியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

  செய்தியாளர் பழனிக்குமார் (தேனி)

   
  Published by:Arun
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி