Home /News /tamil-nadu /

மாயமான பெண்.. பக்கத்துவீட்டில் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம் - நடந்தது என்ன?

மாயமான பெண்.. பக்கத்துவீட்டில் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம் - நடந்தது என்ன?

தேனி கொலை சம்பவம்

தேனி கொலை சம்பவம்

Theni Murder: காணாமல் போனதாக கூறப்பட்ட  பெண், மண்ணில் புதையுண்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேனியில் ஐந்து நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் அருகே உள்ள வீட்டில் சடலமாக கண்டெடுப்பு. மண்ணில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து  காவல்துறையினர் விசாரணை. 

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் முத்துப்பேச்சி (வயது 45)  திருமணமாகாத இவர்,  கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் கங்கானியாக இருந்தவர்.  கடந்த 5 நாட்களுக்கு முன்பு முத்துப்பேச்சியை  காணவில்லை என்று அவரது  சகோதரி கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.    அதனடிப்படையில் விசாரணையைத் துவக்கிய கூடலூர் காவல்துறையினர்,  முத்துப்பேச்சியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    Also Read:  இளம்பெண்ணுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய நடன ஆசிரியர் - தாயும் உடந்தை

    இந்த நிலையில்  முத்துப்பேச்சி வசித்து வந்த வீட்டின் அருகில் உள்ள குடியிருப்புகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் திருப்பமாக முத்துப்பேச்சியின் வீட்டருகே உள்ள மனோஜ் என்பவர் தங்கும் காலி வீட்டின் தரைப்பகுதி  தோண்டப்பட்டு மூடி இருப்பதை கண்டறிந்தனர். மேலும் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு காணாமல் போன முத்துப்பேச்சியின் சேலை வெளியே தெரிந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம்  எனத் தெரியவந்தது.‌

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு முக்கிய ஆதாரங்களை சேகரித்தனர். மேலும் புதைக்கப்பட்ட முத்துப்பேச்சியின் சடலத்தை வருவாய்த் துறையினர் முன்னிலையில் தோண்டி எடுத்த காவல்துறையினர், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

    Also Read: தன் தந்தையை கொலை செய்த கணவரை, உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மனைவி.. நீதிமன்றத்தில் சரண்

    இதனிடையே முத்துப்பேச்சி கொலை செய்யப்பட்டதாக எழுந்த தகவலை  அடுத்து அங்கிருந்த உறவினர்கள், பொதுமக்கள் குற்றவாளியை கைது செய்யக்கோரி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ அவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கூடலூர் காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் காணமல் போன முத்துப்பேச்சி எதற்காக கொலை செய்யப்பட்டார், குற்றவாளி யார்? என்ற விபரம் தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர். காணாமல் போனதாக கூறப்பட்ட  பெண், மண்ணில் புதையுண்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: பழனிகுமார் ( தேனி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Murder, Police, Theni

    அடுத்த செய்தி