தேசிய காயகல்பம் விருது பெற்ற மேலராமநதி ஆரம்ப சுகாதார நிலையம்!

காயகல்பம் விருது

24 மணி நேர பிரசவ வசதி, அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு முழு பரிசோதனை மற்றும் ஸ்கேன் வசதியுடன் கூடிய சுகாதார நிலையம் என அனைத்து வசதிகளும் உள்ளதாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் திகழ்கிறது.

 • Share this:
  கமுதி அடுத்த மேலராமநதி கிராமத்தில்  உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுத்தம், சுகாதாரம், மருத்துவ மனையின் அணுகுமுறைகளுக்காக தேசிய காயகல்பம் விருது பெற்றுள்ளது.

  இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் PHD யின் கீழ் இயங்கும் மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இப்பகுதி கிராம மக்களின் மருத்துவத் தேவையை சேவையாக செய்து 2019-2020 ம் ஆண்டிற்கான தேசிய காயகல்பம் விருது பெற்றுள்ளது.

  தனியார் மருத்துவமனைக்கு நிகராக  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயற்கையான காற்றோட்டம், சுத்தமான இடம், சுகாதாரமான சுற்றுச்சூழல்,  செவிலியர்களின் அரவணைப்பு, சுத்தமான (மினரல்) குடிநீர். இருக்கைகள் கொண்ட தூய்மையான இடவசதி, நோயாளிகளின் குறைகளை கேட்டறிய புகார் பெட்டி என பொதுமக்களின் போற்றுதலுக்கு உரியதாக விளங்குகிறது.

  மேலும் படிக்க: மீனவர்களை மீன்பிடி தொழிலை விட்டே விரட்டும் - புதிய மீன்பிடி மசோதாவுக்கு சீமான் எதிர்ப்பு!  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  24 மணி நேர பிரசவ வசதி, அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு முழு பரிசோதனை மற்றும் ஸ்கேன் வசதியுடன் கூடிய சுகாதார நிலையம்,
  கிராமப்புற பெண்கள் எளிதாக புரிந்து கொள்ள தடுப்பூசி அட்டவணை மற்றும் குழந்தை பெற்ற பெண்களின் அனைத்து சந்தேகங்களை தீர்க்கும் விதமாக விளம்பர பதாகைகள் போன்ற வசதிகள்  அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது.

  இதையும் படிங்க: ஓபிசி சான்றிதழ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு!


  மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவருடன் சேர்ந்து செவிலியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அனைவரின் கூட்டு சேவையால்  காயகல்பம் விருது கிடைக்கப்பெற்றதாக கூறும்  மருத்துவமனை  ஊழியர்கள்,  அடுத்த முழு முயற்சியால் NQAS விருது பெற தயாராகி வருவதாக தெரிவித்தனர்.
  Published by:Murugesh M
  First published: