Home /News /tamil-nadu /

மனைவி நடத்தையில் சந்தேகம்.. கூலித்தொழிலாளி குத்திக்கொலை - கணவன் வெறிச்செயல்

மனைவி நடத்தையில் சந்தேகம்.. கூலித்தொழிலாளி குத்திக்கொலை - கணவன் வெறிச்செயல்

தேனி கொலை சம்பவம்

தேனி கொலை சம்பவம்

Murder| மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து உடன் வேலைக்கு சென்று வரும் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

    தேனி மாவட்டம் கம்பம் புதிய நகராட்சி அலுவலகம் தெருவில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி மாரிச்செல்வம்(38). இவரது மனைவி செல்லமணி (35)  கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தோட்ட வேலைக்கு தினசரி சென்று வருபவர். இந்த நிலையில் தான் கடந்த 4ஆண்டுகளுக்கு முன் கேரளாவிற்கு வேலைக்கு சென்று வரும் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மாரிச்செல்வம் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.‌

    Also Read: காதலன் கண்முன்னே இளம்பெண் பாலியல் வன்கொடுமை - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

    மேலும் தனது மனைவி நடத்தை மாறி தவறாக போனதற்கு காரணம் அவருடன் வேலைக்கு சென்று வந்த கம்பம் சி.எம்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பவுன் ( வயது 48) மற்றும் அவரது கணவர் மகுடபதி(வயது 50) என எண்ணிக் கொண்டு அவர்களிடமும் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கம்பம் நகராட்சி அலுவலகத் தெருவில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் பீடி வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற மகுடபதியிடம், மாரிச்செல்வம்  தனது மனைவியின் நடத்தை குறித்து பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகுடபதியின் நெஞ்சில் மாரிச்செல்வம்  சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மகுடபதியை மீட்ட அங்கிருந்தவர்கள், கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மகுடபதி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    Also Read: வீட்டு ஓனரை விரட்டி விரட்டி வெட்ட முயற்சி - சிசிடிவி காட்சியால் பரபரப்பு

    இதுதொடர்பாக மகுடபதியின் மனைவி பவுன் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த கம்பம் தெற்கு காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மாரிச்செல்வத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்:  பழனிக்குமார் (தேனி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Illegal affair, Illegal relationship, Murder

    அடுத்த செய்தி