Home /News /tamil-nadu /

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கடவுள்: தங்க மோதிரம் அணிவித்த திமுகவினர்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கடவுள்: தங்க மோதிரம் அணிவித்த திமுகவினர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே வந்த கடவுளை அங்கிருந்த திமுகவினர் மற்றும் அவரது உறவினர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு தங்க மோதிரம் அணிவித்து கொண்டாடினர்.

    தேனியில் நகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட  திமுகவைச் சேர்ந்த  கடவுள் என்னும் நபர் வெற்றி பெற்றார். இதையடுத்து, திமுகவினர் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு தங்க மோதிரம் அணிவித்தனர்.

    தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு பெரும்பாலான இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

    தேனி மாவட்டத்தில், அதிமுக கோட்டை என்று கூறப்படும் இடங்களிலும் திமுக இம்முறை வெற்றிபெற்றுள்ளது. இதேபோல், தேனி - அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டில் திமுக, அதிமுக, அமமுக, தேமுதிக சுயேட்சை என 6பேர் போட்டியிட்டனர்.‌

    இவர்களில் அதிமுக வேட்பாளரான ஜெயபாண்டி வெறும் 37வாக்குகள் மட்டும் பெற்றார்.‌ அதே நேரத்தில் தேமுதிக வேட்பாளர் மாநிலராஜா என்பவரோ 74வாக்குகள் பெற்றிருந்தார். இவர்களுக்கு அடுத்தபடியாக அமமுக வேட்பாளர் விஜயராஜா என்பவர் 892வாக்குகள் பெற்றிருந்தார்.‌ இவர்களை எல்லாம் வீழ்த்திய திமுக வேட்பாளர் கடவுள் 1,187வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.



    வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே வந்த கடவுளை அங்கிருந்த திமுகவினர் மற்றும் அவரது உறவினர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு தங்க மோதிரம் அணிவித்து கொண்டாடினர்.

    செய்தியாளர்: பழனிக்குமார்- தேனி
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, Local Body Election 2022, Theni

    அடுத்த செய்தி