முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் குடும்பத்தினர் சிக்கியது எப்படி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் குடும்பத்தினர் சிக்கியது எப்படி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

கொலை வழக்கில் கைதானவர்கள்

கொலை வழக்கில் கைதானவர்கள்

ஈஸ்வரன் தாக்கியதில் கழிப்பறையின் சிலாப் கல்லில் மோதி தலையில் பலத்த காயமடைந்த கிரிஜாபாண்டி வீட்டிலேயே உயிரிழந்தார். 

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

தேனியில் இளம்பெண்ணை வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கியதுடன் அவரை கொலை செய்த குடும்பத்தினர் நாடகமாடிய நிலையில், ராணுவ வீரரான பெண்ணின் கணவர், போலீஸ்காரரான கணவரின் சகோதரர், தாய் உள்பட மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

தேனி பாரஸ்ட்ரோடு 12வது தெருவில் வசித்து வந்த சிவக்குமார் என்வபரின் மகன் ஈஸ்வரன்(26). ராணுவ வீரரான இவருக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள கல்லூத்து அஞ்சல், மகாலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகள் கிரிஜாபாண்டி என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கிரிஜாபாண்டி கொடுத்த புகாரால் ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் ராணுவத்தில் இருந்து ஈஸ்வரன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கிரிஜாபாண்டி அவரது பெற்றோருடன் பேசக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சமரசம் ஏற்பட்ட பிறகு தம்பதியினர் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு மேலாக தனது மகள் கிரிஜாபாண்டியை பார்க்காமலும், பேசாமலும் அவரது பெற்றோர் இருந்து வந்தனர்.

Also Read:   உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் நள்ளிரவில் திடீர் ராஜினாமா: பதவியேற்ற 4 மாதங்களுக்குள் விலகல் ஏன்?

இதனிடையே குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் 3 ஆண்டுகளாக தனியே வசித்து வந்த ஈஸ்வரனின் தந்தை சிவக்குமார் உடல்நலக்குறைவால் பாதிப்படைந்தார். 2020 ஆம் ஆண்டு இறுதியில் மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் இருந்த சிவக்குமாரை பார்க்க வந்த செல்வத்திடம், கிரிஜாபாண்டியை தனது மகன் ஈஸ்வரன் அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகத் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த செல்வம், தேனி பாரஸ்ட்ரோடு பகுதியில் கிரிஜாபாண்டி வசித்து வந்த முகவரியில் தேடிச் சென்று பார்க்கையில் அங்கு அவர்கள் குடும்பம் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் தனது மகள் கிரிஜாபாண்டியை காணவில்லை என பதிவுத் தபால் மூலம் தேனி நகர் காவல் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தலைமறைவாக இருந்த ஈஸ்வரனை நேற்று முன்தினம் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. வரதட்சணை கொடுமை வழக்கால் ராணுவப்பணியை துறக்க நேரிட்டதால் தொடர்ந்து கிரிஜாபாண்டியிடம் ஈஸ்வரன் சண்டை போட்டு வந்துள்ளார்.

Also Read:   மைனர் சிறுமிகள் உட்பட மூவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான அவலம்: அதிரவைக்கும் உத்தரப்பிரதேசம்!

2019ஆம் ஆண்டு இறுதியில் தேனி அருகே உள்ள ரத்தினம் நகர் பகுதியில் வசித்து வந்த நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி தம்பதியினருக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஈஸ்வரன் தாக்கியதில் கழிப்பறையின் சிலாப் கல்லில் மோதி தலையில் பலத்த காயமடைந்த கிரிஜாபாண்டி வீட்டிலேயே உயிரிழந்தார்.   பின்னர் சகோதரர் சின்ன ஈஸ்வரன், தாய் செல்வி ஆகியோர் உதவியுடன் ஒரு சாக்குப்பையில் கிரிஜாபாண்டியின் உடலையும், மற்றொரு சாக்குப்பையில் கருங்கல்லையும் போட்டுக் கட்டி ஆற்றில் வீச திட்டமிட்டுள்ளனர்.

சகோதரர் சின்ன ஈஸ்வரன் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் சடலத்தை எடுத்துக் கொண்டு வந்த இருவரும் அரன்மணைப்புதூர் முல்லை ஆற்றில் வீசிவிட்டு சென்றதாக காவல்துறையினர் விசாரணையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்கு அடிக்கடி வீட்டை மாற்றி குடியிருந்த ஈஸ்வரன் குடும்பத்தினர் கடந்த 3ஆண்டுகளில் மட்டும் தேனியில் பி.சி.பட்டி, பாரஸ்ட்ரோடு, கே.ஆர்.ஆர். நகர், அனுக்கிரஹா நகர், ரத்தினம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே ஈஸ்வரனின் சகோதரர், சின்ன ஈஸ்வரன் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்து பழனியில் பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் கிரிஜாபாண்டியை கொலை செய்து ஆற்றில் வீசியதாகச் சொல்லப்படும் அரன்மனைப்புதூர் முல்லை ஆற்றில் நேற்று காலை  சடலத்தை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ், அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலையில் ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன் ஆகியோர் சடலம் வீசப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். சம்பவம் நடந்து ஓர் ஆண்டுக்கு மேலானதாலும், தொடர்ந்து முல்லை ஆற்றில் இருந்த அதிகளவு நீர்வரத்தாலும் சடலத்தை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது.

முல்லை ஆற்றில் பெண்ணின் சடலத்தை தேடியபோது..

5 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் முல்லை ஆற்றில் தேடியும் சடலம் கைப்பற்றப்படவில்லை.         இதையடுத்து வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கி இளம்பெண்ணை கொலை செய்து ஆதாரங்களை மறைத்ததாக 498(ஏ), 302, 109 மற்றும் 201 ஆகிய 4பிரிவுகளின் கீழ் ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன், செல்வி ஆகிய 3பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர் நேற்றிரவு தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.   வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி இளம்பெண்ணை கொலை செய்து குடும்பமே நாடகமாடிய சம்பவம் தேனி பகுதியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனிக்குமார் - தேனி செய்தியாளர்

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Dowry, Girl Murder, Theni