தேனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - மேலாளர் கைது

தேனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - மேலாளர் கைது

தேனி அரசு மருத்துவமனை

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியார் நிறுவன ஒப்பந்த மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.     

 • Share this:
  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியார் நிறுவன ஒப்பந்த மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனை வளாகத்திற்குள் தினந்தோறும் தூய்மை பணிகளுக்காக தனியார் நிறுவனத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியாளர்களுக்கு மேலாளராக குன்னூர் அருகே அய்யனார்புரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

  இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளரான ரெங்கசமுத்திரத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (29) என்ற பெண்ணிடம் முத்துக்குமார் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

  இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பாக்கியலட்சுமி  புகார் அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தது தொடர்பாக பாக்கியலட்சுமியை செல்லிடபேசி மூலம் முத்துகுமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

  இதுகுறித்து வைகை அணை காவல் நிலையத்தில் பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் முத்துகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  செய்தியாளர் - பழனிகுமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: