வேலை நேரத்தில் சினிமா பாட்டுக்கு ஆட்டம் போட்ட நர்ஸ் - தேனி அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து... வீடியோ
வேலை நேரத்தில் சினிமா பாட்டுக்கு ஆட்டம் போட்ட நர்ஸ் - தேனி அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து... வீடியோ
வேலை நேரத்தில் ஆட்டம் போட்ட நர்ஸ்
Theni : மருத்துவமனையில் பணியில் இருக்கும்போது செவிலியர்கள் சமூக இடைவெளி இன்றி சினிமா பாடலுக்கு நடனம் ஆடி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியின் போது சமூக இடைவெளி இன்றி சினிமா பாடலுக்கு ஆட்டம் போடும் செவிலியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் அமைந்துள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா காலம் என்பதால் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு 170 க்கு மேற்பட்ட மருத்துவர்கள், 400 க்கு மேற்பட்ட செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் அலுவலகத்தில் பணியின் போது சினிமா பாடலுக்கு செவிலியர்கள் ஒன்றாக நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவிலியர் கண்காணிப்பாளர், ஆண் செவிலியர், பெண் செவிலியர் மருத்துவ பணியாளர் என ஐந்து நபர்கள் சமூக இடைவெளி இன்றி கை கோர்த்து குழுவாக சினிமா பாடலுக்கு ஏற்றார் போல் நடனம் ஆடுகின்றனர். மருத்துவமனையில் பணியில் இருக்கும்போது செவிலியர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Video:
தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது, உடன் பணிபுரியும் மருத்துவ பணியாளரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடனம் ஆடியதாகவும், இனி மேல் இது போன்று நிகழாது என வருத்தம் தெரிவித்தனர்.
செய்தியாளர் : பழனிக்குமார் ( தேனி)
மாணவி தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பம் (வீடியோ)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.