Home /News /tamil-nadu /

'கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி இருக்கோம்.. சூறைக்காற்றால் வாழைமரம் முழுவதும் சேதம் ஆகிடுச்சு' - தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்

'கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி இருக்கோம்.. சூறைக்காற்றால் வாழைமரம் முழுவதும் சேதம் ஆகிடுச்சு' - தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்

 விவசாயிகள் வேதனை

விவசாயிகள் வேதனை

TN Farmers : கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்துள்ள நிலையில் தற்பொழுது வாழை மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் கூட்டுறவு கடன் களை எவ்வாறு செலுத்துவது எனத் தெரியாமல் இருப்பதாகவும், இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    பெரியகுளம் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையினால் ரூ.35 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள், வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது. பாதி விளைச்சல் மற்றும் பிஞ்சு காய்களுடன் இருந்த வாழை மரங்கள் அனைத்தும் முறிந்து சேதம் அடைந்துள்ளது.

    மேலும் நல்ல கருப்பன்பட்டி பகுதியில் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்கால் முற்றிலும் ஒடிந்து சேதம் அடைந்துள்ளது. நேற்று மாலை அடித்த சூறைக்காற்றால் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான  வாழை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.



    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பிஞ்சு பருவத்தில் உள்ள வாழைகள் அனைத்தும் சூறாவளி காற்றில் ஒடிந்து சேதமடைந்துள்ளதால் வாழைக்காய்களை விற்பனை செய்ய கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



    கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்துள்ள நிலையில் தற்பொழுது வாழை மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் கூட்டுறவு கடன்களை எவ்வாறு செலுத்துவது எனத் தெரியாமல் இருப்பதாகவும், இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : பழனி குமார்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Rain, Theni

    அடுத்த செய்தி