ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டாஸ்மாக் திறப்பு: தேனியில் மது வாங்க செல்லும் மதுப்பிரியர்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு!

டாஸ்மாக் திறப்பு: தேனியில் மது வாங்க செல்லும் மதுப்பிரியர்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு!

டாஸ்மாக்

டாஸ்மாக்

கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில், தேனி மாவட்ட குடிமகன்களுக்கு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று 2வது அலை தமிழகத்தில் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

Also read: டாஸ்மாக்கில் மதுபாட்டிலை வாங்கியதும் சென்றுவிடுவார்கள்; டீக்கடையில் அப்படியில்லை.. திருநாவுக்கரசர் எம்.பி.

இதைத்தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் நாளை மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் உள்ள 93 கடைகளில் மது வாங்க வரும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஒவ்வொருவரும் குடை கொண்டு வர வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tasmac, Theni, TN Govt