தேனியில் கொரோனா பாதிப்பால் சிறப்பு காவல் ஆய்வாளர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் உயிரிழந்த சிறப்பு காவல் ஆய்வாளர்

இளவரசன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே 19ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

 • Share this:
  தேனியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சிறப்பு காவல் ஆய்வாளர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மகாத்மா காந்தி தெருவில் வசித்து வந்தவர் இளவரசன்(53). இவரது மனைவி தனம். இவர்கள் இளவரசனின் சகோதரன் மகள் ஷீலாதேவியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

  தேனி மாவட்ட மது விலக்கு காவல்துறையில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இளவரசன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே 19ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

  இதில் மே 20ம் தேதி கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளவரசன் இன்று காலை பலனின்றி உயிரிழந்தார்.

  இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான போடியில் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைப்படி அடக்கம் செய்யப்பட உள்ளது. சிறப்பு சார்பு ஆய்வாளர் இளவரசனின் படத்திற்கு தேனி மதுவிலக்கு காவல்துறையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிறப்பு காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் தேனியில் உள்ள காவல்துறையினர் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - பழனிக்குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: