மேகமலை பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறை

தேனி

முக்கிய சுற்றுலாத்தளம் என்பதால் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கும்.

 • Share this:
  சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைப்பகுதியை ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர். மலை வாழ் மக்களுக்கு கபசுர குடிநீர், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

  தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்டது மேகமலை, இரவங்கலாறு, மணலாறு, மகாராஜா மெட்டு, வெண்ணியாறு உள்ளிட்ட 7 மலைக்கிராமங்கள். சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் அங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளம் என்பதால் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கும்.

  Also Read: இ- பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? எத்தனை பேர் வாகனங்களில் செல்ல அனுமதி?

  இந்நிலையில் கொரோனா நோய் பரவலால் சுற்றுலா தளங்கள் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மேகமலை பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்தை ட்ரோன் கேமிரா மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சின்னமனூர் காவல் ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான காவல்துறையினர் மேகமலை மலைச்சாலையில் வெளிநபர்கள் வருகை, உள்ளுர் பொதுமக்களின் நடமாட்டத்தை ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் மலைக்கிராமங்களில் பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

  செய்தியாளர்: பழனிகுமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: