• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தேனியில் ஊரடங்கால் பாதிப்படைந்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி உதவும் மருந்தாளுனர்...

தேனியில் ஊரடங்கால் பாதிப்படைந்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி உதவும் மருந்தாளுனர்...

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி உதவும் மருந்தாளுனர் ரஞ்சித்குமார்

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி உதவும் மருந்தாளுனர் ரஞ்சித்குமார்

ஊரடங்கால் பாதிப்படைந்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் உதவி வருகிறார்.

 • Share this:
  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார். தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுனராக கடந்த 6 ஆண்டுகளாக எம்.சுப்புலாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தெய்வமலர் என்ற மனைவி இரு குழந்தைகள் உள்ளனர். கல்லூரி காலத்தில் ஏழைகளுக்கான காப்பகத்தில் படித்ததாலோ என்னமோ, இயல்பாகவே உதவும் குணத்தை வளர்த்துக் கொண்ட ரஞ்சித்குமார், இதுவரை 38முறை ரத்ததானம் செய்துள்ளார்.

  அதோடு மட்டுமல்லாது நண்பர்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து 16 முறை ரத்ததான முகாமையும் நடத்தியுள்ளார். இதன் மூலம் தலசீமியா எனப்படும் ரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவைக்கேற்ப ரத்தம் வழங்கியும் வருகிறார்.  தேனி மாவட்டத்தில் ரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 26குழந்தைகளுக்கு தற்போது வரை ரத்தம் வழங்கி உதவி வரும் ரஞ்சித்குமார், அவசர தேவைக்கு யார் எப்போது அழைத்தாலும் மறுக்காமல் உதவ சென்று விடுவார். மேலும் 278நபர்களின் இருதய அறுவைச் சிகிச்சைக்கும் உதவி புரிந்துள்ளார். இது தவிர சமூக நலனில் அக்கறை கொண்டு பிறப்புச்சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை ஏழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார்.

  மேலும் மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்பினர் என ரஞ்சித்குமாரின் சேவையை பாராட்டி வழங்கிய பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள், பதக்கங்கள் அவரை அலங்கரிக்கின்றன.

  இவ்வாறு அரசுப்பணியில் இருந்து கொண்டும் பல்வேறு சமூக சேவை புரிந்து வரும் ரஞ்சித்குமார், ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கி தன்னலமற்றுத் திகழ்கிறார். சாலையோரங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் யாசகத்திற்காக ஏங்கியிருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு வழங்குவதோடு மட்டுமல்லாது தன்னிடம் இருக்கும் உடைகள், முக கவசம் வழங்கியும் வருகின்றார். இவருக்கு உறுதுணையாக பட்டதாரி ஆசிரியப்படிப்பு படித்த மனைவி தெய்வமலர் மற்றும் நண்பர்களும் உள்ளனர்.  கொரோனா காலத்தில் அனைத்து வசதிகளும் கொண்டவர்களே சில நேரங்களில் உணவுப்பொருட்களுக்காக சிரமம் அடைந்தனர். இருப்பவர்கள் சிரமம் அடையும் போது எதுவுமே இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என யோசித்து அவர்களுக்கு ஒரு வேளையாவது உணவு வழங்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். அவரது விருப்பத்திற்கேற்ப நாங்களும் எங்களால் ஆன உணவுப்பொருட்களை வைத்து தக்காளி, லெமன், தயிர், புளியோதரை, சாம்பார் சாதம் என வீட்டிலேயே உணவு தயாரித்து வழங்க ஆரம்பித்தாக கூறுகிறார்.

  நாங்கள் தயார் செய்வதை அறிந்த அக்கம் பக்கத்தினரும் அவர்களிடமுள்ள உணவுப்பொருட்களை வழங்க தாமாக முன்வந்தனர். இதன் மூலம் முழு ஊரடங்கு காலத்தில் நாளொன்று 25 முதல் 50நபர்களுக்கு உணவு வழங்கி வந்தோம்.

  குறைந்த வருமானம் ஈட்டுவதால் பொருளாதாரத்தில் சிரமம் இருந்தாலும், இல்லாதவர்களுக்கு உதவும் போது கிடைக்கும் மனநிலையில் உண்டாகும் ஆனந்தத்தால் எனது கணவருக்கு சந்தோசம் ஏற்படும். அவரது மனநிறைவே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

  குழந்தைக்கு பால் வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தில் இல்லாதவர்களுக்கு அவர் உதவி வந்தாலும் அவர் மீது நான் கோபப்டுவதில்லை. மாறாக அவரை ஊக்குவித்து சேவையாற்ற வைப்பேன் எனக் கூறும் ரஞ்சித்குமாரின் மனைவி தெய்வமலர், நான் தடுத்தாலும் பிறருக்கு உதவுவதை அவர் நிறுத்த மாட்டார். எங்களின் பொருளதார சிக்கலை சரி செய்வதற்கு மாற்றாக கிடைக்கும் கூலி வேலைக்கு எனது கணவர் செல்வார் என்கிறார் ரஞ்சித்குமாரின் மனைவி தெய்வமலர்.

  சிறுவயதில் இருதயத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நான் திருமணத்திற்குப் பிறகு கர்ப்ப காலத்தில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டேன். அப்போது சில மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு வாங்க நேரிடும் போது எங்களுக்கு உதவியவர் ரஞ்சித்குமார். மேலும் பிரசவத்தின் போது தேவையான உதவிகளை அவர் செய்து தந்ததால் இன்றைக்கு நாங்கள் குடும்பமாக ஆரோக்யமாக இருக்கின்றோம்.

  இது தவிர மருத்துவமனையில் பணி முடிந்து வீடு திரும்பும் வேளையில் சாலையில் ஒரு நாய் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாலும் யாரையும் எதிர்பார்க்காமல் தானகவே அதனை அப்புறப்படுத்தி அடக்கம் செய்வதோடு மட்டுமல்லாது அந்த இடத்தை சுத்தம் செய்த பிறகு தான் ரஞ்சித்குமார் செல்வார். தற்போது கொரோனா காலத்தால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊடங்கின் போது ஆதரவற்றவர்களுக்கு அவர் உதவி வருவதை அறிந்த நாங்களும் அவருடன் இணைந்து எங்களால் ஆன பொருட்களை வழங்கி உதவி வருகின்றோம் என்கிறார்

  குறைபாடுடைய குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சைகளை அளிப்பதே எனது முதல் பணி. ஆனால் குறைபாடுடையவர்களை சரி செய்வது சுலபம். அதே வேளையில் எதுவுமே இல்லாமல் இருப்பவர்களின் தேவையை பூர்த்தி செய்வதே சவால் நிறைந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இயலாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே எங்களால் ஆன சிறு, சிறு உதவிகளை வழங்கி வருகின்றோம்.

  மேலும் படிக்க... கொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்

  இது ஒரு புறம் மகிழ்ச்சியை தந்தாலும், இருப்பதை பகிர்ந்து இல்லாதவர்களுக்கும் கொடுத்து வாழ வேண்டும் என கொரோனா நமக்கு ஒரு பாடத்தை கற்பித்துள்ளது. அதனை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்கிறார் ரஞ்சித்குமாhர்

  வேலை முடிந்ததும் எப்போது வீடு திரும்புவோம் என எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் குறைந்த வருமானமாக இருந்தாலும் அதன் மூலம் இல்லாதவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து வ்ரும் ரஞ்சித்குமார் போன்றோர் பாராட்டுக்குரியவர்களே.

  மேலும் படிக்க... Kerala total lockdown | கேரளாவில் மே 8-ம் தேதி முதல் முழு லாக்டவுன்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

  செய்தியாளர்: சுப.பழனிக்குமார், தேனி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: