ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தகாத வார்த்தைகள் பேசி பள்ளி மாணவர்களிடையே மோதல்.. பெரியகுளத்தில் பரபரப்பு.. வைரலாகும் வீடியோ..

தகாத வார்த்தைகள் பேசி பள்ளி மாணவர்களிடையே மோதல்.. பெரியகுளத்தில் பரபரப்பு.. வைரலாகும் வீடியோ..

தேனி

தேனி

Theni District: பெரியகுளம் பேருந்து நிலைய வளாகத்தில் பள்ளி மாணவர்களிடையே திடீர் மோதல். தகாத வார்த்தைகள் பேசி தங்களுக்குள் சண்டையிட்டதால் பொதுமக்கள் விலக்கி விட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெரியகுளம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே தகராறு. சமூக வலைதளங்களில் பரவும் காணொளி.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை மற்றும்  ஈ - புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பெரியகுளம் பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து வரும் மாணவர்கள் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பள்ளிகளுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில்  வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவர்களிடையே இன்று பேருந்து நிலைய வளாகத்திற்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.‌ மாணவர்கள் ஒருவொருக்கொருவர்  தகாத வார்த்தைகளால் பேசியும், கைகளால் தாக்கிக் கொண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள், தகராறில் ஈடுபட்ட மாணவர்களை விலக்கி விட்டனர்.‌ மேலும் தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

மாணவர்களிடையே ஏற்படும் தகராறுகளை தவிர்ப்பதற்கு பள்ளி நேரங்களில் பேருந்து நிலையம் நிறுத்தங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

First published:

Tags: Periyakulam Constituency, Theni, Viral Video