உணவின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு சொந்த செலவில் பழங்கள் வழங்கும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்!

குரங்குகளுக்கு உணவு வழங்கும் ஓபிஎஸ் மகன்

கடந்த 30 நாட்களுக்கு மேலாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து இல்லாததால் மலைச்சாலையில் சுற்றி திரிந்த குரங்குகள் உணவு இன்றி தவித்து வந்தது.

  • Share this:
    ஊரடங்கால் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால் கொடைக்கானல் மலைச் சாலைகளில் உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு பழங்கள் வழங்க ஓ.பி.எஸ்-ன் இளைய மகன் ஜெயபிரதீப் உத்தரவிட்டதையடுத்து அதிமுகவினர் வழங்கி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டம்டம் பாறை வரையிலான கொடைக்கானல் மலைச் சாலையின் இரு புறங்களிலும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்த மலைச் சாலையில் உள்ள குரங்குகள் அனைத்தும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே  விட்டு செல்லும் மீத உணவுகளை உண்டு வந்தன. இதனால் இப்பகுதியில் ஆண்டுக்கு ஆண்டு குரங்குகளின் கூட்டம் அதிகரித்து சாலை முழுவதும் கூட்டம் கூட்டமாக 500க்கும் மேற்பட்ட குரங்குகள் இருந்து வந்தது.

    இந்நிலையில் கொரோனா நோய் பரவலின் காரணமாக  கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடைவித்தக்கப்பட்டது. இதனால் கடந்த 30 நாட்களுக்கு மேலாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து மற்றும் எந்தவித வாகனப் போக்குவரத்தும் இல்லாததால் மலைச்சாலையில் சுற்றி திரிந்த குரங்குகள் உணவு இன்றி தவித்து வந்தது.

    இதனை அறிந்த  தமிழக முன்னாள்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் தனது சொந்த செலவில் கொடைக்கானல் மலைச் சாலையில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு பழங்கள், உணவுகள் வழங்க முன் வந்துள்ளார்.

    வாழை, தர்பூசனி, அன்னாசிப்பழம், மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் மற்றும் உணவும் அதிமுக தொண்டர்கள் மூலம் இன்று முதல் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன.  உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு பழங்கள் வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்  - பழனிக்குமார்
    Published by:Esakki Raja
    First published: